திண்டுக்கல் பத்மகிரி மலைக் கோவிலில்… சுவாமி திருமேனிகளை நிறுவக் கோரி, தமிழக ஆளுநரிடம் மனு…
திண்டுக்கல் பத்மகிரி மலைக் கோவிலில்… சுவாமி திருமேனிகளை நிறுவக் கோரி, தமிழக ஆளுநரிடம் மனு…
திண்டுக்கல் பத்மகிரி மலைக்கோவிலில் ஸ்ரீ அபிராமி அம்மன்- பத்மகிரீஸ்வரர் விக்கிரகங்களை நிறுவ மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்கு திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த மாதம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் 27170 குடும்பத்தினரிடம் கையெழுத்து பெறப்பட்டது. இந்த கையெழுத்து பிரதிகள் அனைத்தையும், தமிழ்நாடு ஆளுநர் மேதகு R.N. ரவி அவர்களிடம், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் வழங்கினார்.
அவருடன் தென் பாரத அமைப்பாளர் க. பக்தன், மாநில செயலாளர்
VS செந்தில்குமார், மாநில செய்தி தொடர்பாளர் A.T. இளங்கோவன்,
திண்டுக்கல் மாவட்டத் தலைவர் R.P. ராஜா ஆகியோர், திண்டுக்கல் பத்மகிரி மலையில் வரலாறு மற்றும் இந்து முன்னணியின் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் அவர்களிடம் விளக்கி கூறினர்.
கனிவுடன் கேட்டுக் கொண்ட ஆளுநர் அவர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்…