திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயருக்கே அல்வா கொடுத்த திமுக பெண் கவுன்சிலர்.
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயருக்கே அல்வா கொடுத்த திமுக பெண் கவுன்சிலர்.
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 63 வது வார்டு கவுன்சிலர் பொற்கொடி பேசத் தொடங்கினார். அப்போது அவர் கையில் வைத்திருந்த ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை எடுத்து மேயரின் தவாலியிடம் கொடுத்து மேயரிடம் கொடுத்தார்.
மேயர் அன்பழகன் அதை வாங்கி திறப்பதற்கு முற்பட்டார். அப்போது அவர் கவுன்சிலர் பொற்கொடியை பார்த்து எனக்கு மட்டும் ஏன் தனியாக ஸ்வீட் தருகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு கவுன்சிலர் பொற்கொடி எங்கள் வார்டு பகுதி மக்களின் கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவில்லை. எங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தவே உங்களுக்கு நான் அல்வா தருகிறேன் என்று கூறினார். உடனே மேயர் அன்பழகன் ஸ்வீட் பாக்ஸை திறக்காமல் அப்படியே வைத்துவிட்டார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.