ஆக.,16-ல் கூடுகிறது தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்
ஆக.,16-ல் கூடுகிறது தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்.
வரும் 16-ம் தேதி தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் கூட உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.க, பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் விடுத்துள்ள செய்தியில், வரும் 16-ம் தேதி காலை 10: 30 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது.இதில் அனைத்து மாவட்ட செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தி.மு.க, மாநாடு, முப்பெரும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.