தீக்காயங்களுடன் போராடிய ஏழை மாணவிக்கு, தனியார் மருத்துவமனையில் சேர்த்து உதவி செய்த திமுக ஒன்றிய துணை பெருந்தலைவர்.
தீக்காயங்களுடன் போராடிய ஏழை மாணவிக்கு, தனியார் மருத்துவமனையில் சேர்த்து உதவி செய்த திமுக ஒன்றிய துணை பெருந்தலைவர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கோலியன்குளம் ஊரை சார்ந்த வீரபத்திரன் கஸ்தூரி தம்பதியரின் மகள் எட்டு வயதுடைய சிறுமி யாழினி முகம் மட்டும் உடல் பகுதியில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஏழை குடும்பத்தைச் சார்ந்த அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது உறவினர் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஜாக்கமங்கலம் ஒன்றிய துணை பெருந்தலைவரும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான வழக்கறிஞர் சரவணன் அவர்களிடம் இந்த தகவல் தெரிவிக்கபட்டது. அவர் உடனடியாக தனது நிர்வாகிகளுடன் நேரடியாக சென்று சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் மட்டும் ஆசாரிபள்ளம் டீன் ஆகியோரிடம் கலந்து பேசி சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். அதன் பின் நேரடியாக சென்று சிறுமியின் நிலையை பார்த்தவுடன் அவர் படும் வேதனையை பார்த்து மன வருத்தப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிறுமியின் உறவினரிடம் கலந்து பேசி தனியார் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார்.
அதற்கான செலவையும் தானே ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் உறவினருக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். தற்போது சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. என்ற வள்ளுவரின் குரலுக்கு இணங்க சரவணன் செய்த உதவியை பலரும் வலை தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.