பதவி உயர்வுக்காக தண்டவாள கொக்கிகளை கழற்றி நாடகமாடிய ஊழியர்கள் கைது.

பதவி உயர்வுக்காக தண்டவாள கொக்கிகளை கழற்றி நாடகமாடிய ஊழியர்கள் கைது.

சூரத் : குஜராத்தில், பதவி உயர்வுக்கு ஆசைப்பட்ட ரயில்வே ஊழியர்கள் மூவர், தாங்களே ரயில் தண்டவாள கொக்கிகளை கழற்றி விட்டு, ரயிலை எச்சரித்து நிறுத்தியது விசாரணையில் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம், சூரத் மாவட்டம் கிம் ரயில் நிலையம் அருகே சமீபத்தில், 1 கி.மீ., நீளத்துக்கு தண்டவாளத்தில் இருந்த கொக்கிகள் மற்றும் தண்டவாளத்தை இணைக்கும், ‘பிஷ்பிளேட்’ எனப்படும் இரும்பு கிளிப் ஆகியவை கழற்றப்பட்டு இருந்தன.

இதை கண்டுபிடித்த பணியில் இருந்த டிராக்மேன் சுபாஷ் போதர் உள்ளிட்ட மூன்று ஊழியர்கள், ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் பெரும் ரயில் விபத்து தடுக்கப்பட்டது. உரிய நேரத்தில் தகவல் தந்த அவர்களுக்கு பாராட்டு குவிந்தது.

இதன் பின்னணியில் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்பதால், வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் டிராக்மேன் சுபாஷ் போதரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணனான தகவல்களை கூறியுள்ளார்.

சந்தேகமடைந்த போலீசார், கொக்கிகள் கழற்றப்பட்டிருப்பது குறித்து டிராக்மேன் தகவல் தருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், அதே வழித்தடத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட்டுகளிடம் விசாரித்தனர். அவர்கள், தங்கள் ரயில் கடக்கும் போது கொக்கிகள் கழற்றப்பட்டதாக தெரியவில்லை என்றனர்.

உரிய கருவிகள் இருந்தால் மட்டுமே இவ்வளவு விரைவாக கொக்கிகளை கழற்ற முடியும் என்பதால் டிராக்மேன் உட்பட பணியில் இருந்த மூவரையும் பிடித்து விசாரித்ததில், கொக்கிகளை கழற்றியதை ஒப்புக்கொண்டனர். நாசவேலையை தடுத்ததற்காக பதவி உயர்வு, பரிசு, புகழ் கிடைக்கும் என கருதி, இந்த செயலில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்