முன்னாள் பாக்.,உளவு அதிகாரி கைது. ராணுவ கோர்ட் காவலில் வைப்பு.

முன்னாள் பாக்.,உளவு அதிகாரி கைது. ராணுவ கோர்ட் காவலில் வைப்பு.

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உளவு அதிகாரி கைது செய்யப்பட்டு ராணுவ கோர்ட் காவலில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 2019 -2021ம் ஆண்டுகளில் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அமைப்பில் லெப்டினட் ஜெனரலாக பதவி வகித்தவர் பையஸ் ஹமீத், இவர் தன் பதவி காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்நாட்டு அரசின் வீடு வசதி திட்டத்தில் ஊழல் செய்ததாக 2023ம் ஆண்டு புகார் கூறப்பட்டு, ராணுவ சட்ட விதிகளின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கடந்த ஏப்ரலில் உத்தரவின் பேரில் உயர் மட்டக்குழு விசாரணை நடத்தியது. இதையடுத்து குற்ற வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவர் ராணுவ கோர்ட் காவலில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ கோர்ட் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்