காலாவதியான நூடுல்ஸ், சிறுவர்களுக்கு வயிற்று போக்கு. இது சிவகங்கையில் நடந்த பரபரப்பு.
காலாவதியான நூடுல்ஸ், சிறுவர்களுக்கு வயிற்று போக்கு. இது சிவகங்கையில் நடந்த பரபரப்பு.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் பல்பொருள் அங்காடி மையத்தில் திருப்புவனம் புதிரைச் சேர்ந்த சந்தான ராஜ் மகன் ருத்ர பிரியன் (வயது 11) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுஜித் மண்டல் மகள் அஹான்சா மண்டல் (வயது 17) ஆகிய இருவரும் அங்காடியில் நேற்றுமுன்தினம் மாலை நூடுல்ஸ் வாங்கிச் சென்றுள்ளனர்.
அந்த நூடுல்ஸ் வீட்டில் போய் இரவு சாப்பிட்டவுடன் வயிறு வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று காலையில் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நலம் குன்றியுள்ளது உடனடியாக அந்த நூடுல்ஸ் டப்பாவை எடுத்துப் பார்க்கையில் காலாவதியான நூடுல்ஸ் என்று தெரிய வரவே அதிர்ச்சி அடைந்தனர் .
இதனை தொடர்ந்து உடனடியாக திருப்புவனம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுக்கவே உணவு பாதுகாப்பு அலுவலர் சிவகுமார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று காலாவதியான ஒரு நூடுல்ஸ் டப்பா மற்றும் மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததுடன், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்ததற்கு நோட்டீஸ் வழங்கி உள்ளார். இச்சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.