விஷம் குடித்து தந்தை பலி மகன் கவலைக்கிடம்

விஷம் குடித்து தந்தை பலி மகன் கவலைக்கிடம்.

திருப்புத்துார் ஒன்றியம் காரையூர் அகதிகள் முகாமில் வசிக்கும் தந்தை,மகன் விஷம் குடித்ததில் தந்தை உயிரிழந்தார். மகன் கவலைக்கிடமாக உள்ளார். சிங்கம்புணரி ரோட்டில் காரையூர் அகதிகள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்  இவரது மனைவி பஞ்சவர்ணம்  இவர்களுக்கு நிதின்ராஜ்15, சுபிக்க்ஷன்12 இரு மகன்கள் உள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன் பஞ்சவர்ணம் வேறொருவருடன் குடும்பத்தை விட்டு சென்று விட்டார். இதனால் மன அழுத்தத்திற்கு மோகன்ராஜ் ஆளானார். குடும்பத்துடன் தற்கொலை செய்வது என்று மோகன்ராஜ் முடிவெடுத்தார். நேற்று காலை தனது மகன்கள் இருவருக்கும் விஷத்தை கொடுத்தார். விஷத்தை குடிக்க மறுத்த மகன்கள் இருவரையும், அழுது கொண்டே அடித்து குடிக்க கட்டாயப்படுத்தியுள்ளார். மூத்த மகன் நிதின்ராஜ் விஷத்தை தட்டிவிட்டு அங்கிருந்து தப்பி விட்டார்.

இளைய மகன் சுபிக் ஷனும், மோகன்ராஜும் விஷத்தை குடித்து விட்டனர். கசக்கிறது என்று சுபிக் ஷன் மிச்சம் வைத்த விஷத்தையும் மோகன்ராஜ் குடித்துள்ளார். நிதின்ராஜ் கூறி தகவல் தெரிந்தவர்கள் தந்தையையும், மகனையும் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் உயிரிழந்தார். இவரது மகன் சுபிக்க்ஷன் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கண்டவராயன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்