ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் பெயரில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 5 பேரும் சுயேச்சையாக தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதால் தேர்தலில் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாக களமிறங்குகிறார். அவர், தனது ஆதரவாளர்களுடன் நேற்று  வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளராக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் (ஓ.பன்னீர்செல்வம்) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் குழப்பம் ஏற்படுத்த இது போன்று மற்றொருவர் மனு தாக்கல் செய்திருக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவதாக மீண்டும் ஒரு ஓபிஎஸ் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார். ராமநாதபுரம் வாலாந்தரவை பகுதியைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி விஷ்ணு சந்திரனிடம் விருப்பம் மற்றும் தாக்கல் செய்தார்.

இதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் நான்காவதாக ஒருவரும், ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஐந்தாவதாக மற்றொருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் பெயரில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 5 பேரும் சுயேச்சையாக தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதால் தேர்தலில் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்