குற்றாலத்தில் வெள்ள பெருக்கா..? குளிக்க முடியாமல் தவிக்கிறீர்களா..?இதோ மேலும் சில அழகான அருவிகள்.

குற்றாலத்தில் வெள்ள பெருக்கா..? குளிக்க முடியாமல் தவிக்கிறீர்களா..?இதோ மேலும் சில அழகான அருவிகள்.

பெரும்பாலும் சீசன் நாட்களில் ( தென் மேற்கு பருவ மழை காலங்களில் ) குற்றாலத்திற்கு சென்றால்… கூட்டம் அதிகமாக இருக்கும்… நிம்மதியாக குளிக்க முடியாது.

இதோ இயற்கையின் ரம்மியத்தை அனுபவிக்க… குற்றாலத்தில் இருந்து செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் வழிகளில் எண்ணற்ற அருவிகள், ஆறுகள் உள்ளன… அங்கு சென்ற குளித்து ஓய்வெடுத்து மகிழலாம்..கூட்டமும் குறைவு.  அதேபோல் நம்மை தொட்டு செல்லும் மேக கூட்டங்களுடன் மலைப்பகுதிகளில் இயற்கை ரசிக்கலாம் …..

இதோ..அவற்றில் சில குடும்பத்துடன் செல்வதற்கு பாதுகாப்பான சில அருவிகள் .. !

 

1.பாலருவி ( அனைவரும் அறிந்தது)

2. Venture falls, Kazhuthoratti (தனியார் அருவி நூறு ரூபாய் ஒருவருக்கு பாதுகாப்பான குடும்பத்துடன் குளிக்கலாம் உடை மாற்றும் அறைகள் உள்ளன)

3.Isfield Water falls (Near Venture falls, கட்டணம் ஏதும் இல்லை குடும்பத்துடன் பாதுகாப்பாக குளிக்கலாம்)

4.சிறு சிறு அருவிகள் சிறு சிறு ஆறுகள் (Kazhuthoratti to Ambanad Estate Route செல்லும் வழிகளில் அமைந்துள்ளது ரம்யமான ரப்பர் தோட்டங்கள் அண்ணாச்சி பழ தோட்டங்கள் இடையே  அமைந்துள்ளன ….அங்கு பெரும்பாலும் தமிழர்கள் வேலை செய்வதால் பாதுகாப்பாகவும் குடும்பத்துடனும் குளிக்கலாம்.

5.Mangayam Water falls (Thenmala – Trivandrum Route செல்லும் சாலையில் பாலோடு என்னும் ஊரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் கேரளா வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருவி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி தலா ஒருவருக்கு 25 ரூபாய் குடும்பத்துடன் பாதுகாப்பாக குளிக்கலாம்)

6.Meemodu Water falls (Themala to Trivandrum Route செல்லும் வழியில் கல்லரா என்னும் நகரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஒரு சிறிய ஐயப்பன் கோவில் கீழே அருவி என அழகாய் அமைந்திருக்கும் சுற்றிலும் ரப்பர்தோட்டங்கள் ரம்யமாக இருக்கும்)

குறிப்பு : டூவீலர் கார் அல்லது தனியார் வாகனங்களில் செல்பவர்களுக்கு மட்டுமே எளிதாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்