திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பணத்தாள்கள் பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டுப்
பணத்தாள்கள் பறிமுதல்.
வெளிநாட்டுக்கு முறைகேடாக கொண்டு செல்ல முயன்ற வெளிநாட்டு பணத்தாள்களை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, சார்ஜா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் மற்றும் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் பயணியொருவர், தனது உடமைகளுக்குள் மறைத்து ரூ. 30.08 லட்சம் மதிப்பிலான (242 எண்ணிக்கையிலான) வெளிநாட்டுப் பணத்தாள்களை முறைகேடாக கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அவற்றுக்கான அனுமதியேதும் பெறப்படவில்லை.
இதனையடுத்து பணத்தாள்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்