சாலை விபத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
சாலை விபத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த நிகில், அனு இருவரும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு மலேசியா சென்ற தம்பதியினர், இன்று அதிகாலை திருவனந்தபுரம் திரும்பியுள்ளனர். புதுமண தம்பதியை பிஜு ஜார்ஜ், மத்தாய் ஆகியோர் காரில் அழைத்து வந்து கொண்டிருந்தனர். பத்தனம்திட்டாவில் கோநி என்ற இடத்தில் கார் வந்தபோது எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் புதுமண தம்பதி நிகில், அனு மற்றும் பிஜு ஜார்ஜ், மத்தாய் ஆகியோர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் காருக்குள் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டிரைவர் தூங்கியது விபத்துக்கு காரணம் என போலீசார் விசாரணையில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.