சிவகங்கையில் இலவச சிறப்பு சிகிச்சை முகாம். நகராட்சி தலைவர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
சிவகங்கையில் இலவச சிறப்பு சிகிச்சை முகாம். நகராட்சி தலைவர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரத்தில் உள்ள வ .உ. சி .தெருவில் ஸ்ரீ சாய் அபினேஷ் குழந்தைகள் நலன் மற்றும் பொது மருத்துவமனை மகிழ் ஹியரிங் கேர் இணைந்து நடத்தும் இலவச சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.
இவ்விழாவினை நகராட்சி மன்ற தலைவர் சி.எம். துரை ஆனந்த் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அவருடன் நகர் மன்ற உறுப்பினர்கள் ராமதாஸ், மதியழகன் மற்றும் அரசு வழக்கறிஞர். சாய் சுந்தர் ,மருத்துவர், ஸ்ரீ சாய் அவினேஷ் குழந்தைகள் நலன் மற்றும் பொது மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் வ. உ. சி. தெரு பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..