நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி பறிமுதல்.
நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி பறிமுதல்.
சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.