ஹிமாவத் கோபால்சாமி பெட்டா…
ஹிமாவத் கோபால்சாமி பெட்டா…
பெட்டா என்பதன் கன்னட வார்த்தைக்கு மலைச்சிகரம் என்றே சொல்கிறார்கள். ஊட்டியின் தொட்ட(பெரிய) பெட்டா(சிகரம்) என்பதன் மூலமே இதனை ஒப்பிட்டு புரிந்திட முடிகிறது. ஹிமாவத் என்பதற்கு “மூடுபனி” என்கிற பொருளாம். அதற்கேற்பவே பெரும்பாலான நாட்களில் ஹிமாவத் கோபால்சாமி பெட்டா மூடுபனி சூழ்ந்தே இருக்கும்.
இந்த மலைக் கோயிலானது பந்திப்பூரிலிருந்து குண்டல்பேட் செல்கிற தேசிய நெடுஞ்சாலையில் இடதுபுறமாக சில கிலோ மீட்டர்கள் சமவெளியில் பயணித்து மலையேற வேண்டும்…
குண்டலுபேட்டிலிருந்து தென்மேற்கே சுமார் 16 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சுற்றுப்புறங்களில் உள்ள ஒரு உயரமான மலையாகும். இது கடல் மட்டத்தில் இருந்து 4,770 அடி உயரத்தில் உள்ளது. இது தட்சிண கோவர்த்தனகிரி என்றும் குறிப்பிடப்படுகிறது. மலையின் உச்சி மேகங்கள் மற்றும் மூடுபனியால் சூழப்பட்டதாகத் தெரிகிறது, எனவே இமாவத் கோபாலசுவாமி பெட்டா (ஹிமவத் என்றால் மூடுபனியால் மூடப்பட்டிருக்கும்) என்று பெயர். 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பழைய கோட்டை மலையில் உள்ளது. கோட்டையின் உள்ளே கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோபாலசுவாமி கோயில் உள்ளது.
கோயிலின் கோபுரம் ஒற்றை அடுக்கு மற்றும் சுற்றுச்சுவரில் உள்ளது. முக மண்டபத்தின் முகப்பு சுவர் தசாவதாரத்தின் (விஷ்ணுவின் அவதாரங்கள்) சிற்பத்தைக் கொண்டுள்ளது. கர்ப்பகிரகத்தில் ஒரு மரத்தடியில் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணரின் சிலை உள்ளது. கிருஷ்ணரின் சிலை, இடது கால் விரலை வலது பக்கம் வைத்தவாறு அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நமது சொந்த வாகனத்திலேயே பார்த்து பரவசப்பட்ட அந்த இடத்தை, இப்போது நமது சொந்த வாகனத்தில் பயணிப்பதற்கு வாய்ப்பே இல்லை.. என்று வனத்துறையினர் சொல்லிவிட்டனர். இப்போது அதுமாதிரி செல்வதற்கு வனத்துறையினர் அனுமதிப்பதில்லை.
மலையடிவாரம் வரைதான் நமது வாகனத்தில் செல்ல முடியும். பிறகு அங்கிருந்து மலைமீது செல்ல கர்நாடக அரசு போக்குவரத்து பேருந்துகளில்தான் செல்ல முடியும்…
முதல் பேருந்தில் பயணித்து திரும்பிவர கடைசிப் பேருந்துவரை மேலேயே இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பேருந்தில்கூட நீங்கள் திரும்பி வரலாம். மேலே சென்று கீழே வருவதற்கு ஒருமுறைமட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும்…
மேலே என்ன பார்க்கலாம்?
வாய்ப்பிருந்தால் எந்த விலங்கை வேண்டுமானாலும் பார்க்கலாம். பலர் புலிகளைப் பார்த்திருக்கிறார்கள். யானை, கேளையாட்டினைக்கூட பார்த்திருக்கிறார்கள் மிகவும் சில்லெனவிருக்கும் குளிர்ச்சியான இடம்…
புகைப்படக் காரர்களுக்கும், இயற்கையை ரசிப்பவர்களுக்கும் மிகவும் ஏற்ற இடம்…
சமவெளிப் பயணத்தினை சரியான காலகட்டத்தில் செல்ல வாய்க்குமானால் பரந்த சூரியகாந்தி தோட்டங்களைக் காணலாம்…
வாய்ப்பிருந்தால் ஒருமுறையாவது சென்று வாருங்கள். மிகவும் வேறுபாடான அனுபவமாக இருக்கும்…
முன்பெல்லாம் மனித தலைகளை பார்ப்பதே அரிது. இப்போது கீழேயே சிறு நகரமாகிவிட்டது. மேலே ஒரே மனிதக் கூட்டம்தான்…