குன்னூரில் வேட்டை நாய்களை பயன்படுத்தி விலங்குகள் வேட்டை. வன ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சி.

குன்னூரில் வேட்டை நாய்களை பயன்படுத்தி விலங்குகள் வேட்டை. வன ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சி.

நீலகிரிமாவட்டம் குன்னுார் காட்டேரி பகுதியில் வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடந்த, 25ம் தேதி குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் வனத்துறை சார்பில் சோதனை நடந்தது.

அப்போது, காரில் நாட்டு வெடிகுண்டு உட்பட வேட்டைக்கு பயன்படுத்தும் சுருக்கு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், வெலிங்டன் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்,38, ராஜன்,41, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்”

அதில், ராமகிருஷ்ணன் பல இடங்களிலும் வனவிலங்குகள் வேட்டைக்காக நாட்டு வெடி குண்டு வைத்துள்ளதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து, ஏ.சி.எப்., மணிமாறன், குன்னுார் ரேஞ்சர் ரவீந்திரநாத், தலைமையில், வனத்துறையினர், போலீசார், வருவாய் துறையினர் காட்டேரி கிளன்டேல் அருகே ஆற்றோர பகுதியில் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது ஆற்றோர பகுதியில் செட் அடித்து, 6 வேட்டை நாய்கள் வைத்து வேட்டையாடுவது கண்டுபிடிக்க பட்டது வேட்டைக்கு பயன்படுத்தும் நாய்கள் குறித்தும் நாட்டு வெடி குண்டு வைத்துள்ளது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அந்த செட் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் கூறிஉள்ளனர்

வேட்டை நாய்களை வைத்தும் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தியும் விலங்குகளை வேட்டையாடிய விவகாரம்  வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்