காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டுவேன் : பெரம்பலூர் தொகுதி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒழிப்பேன். அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் உறுதி.
காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டுவேன் : பெரம்பலூர் தொகுதி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒழிப்பேன். அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் உறுதி.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை ஒன்றியம் மேட்டுப்பட்டி எல்லை கோவில், முத்தம்பட்டி, மேட்டுப்பட்டி ,தும்பலம், பாப்பாபட்டி, சேருகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தை துவங்கினார். பிரசாரத்திற்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமை வகித்து அதிமுக ஆட்சியின் போது செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். மேலும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது பொதுமக்களிடையே முசிறி தொகுதி மக்களின் கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் . விவசாயம் மேம்படவும், முசிறி காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டிடவும், வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவும், அரசு பெண்கள் கலைக் கல்லூரி அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வேட்பாளர் சந்திர மோகன் பொதுமக்கள் மத்தியில் வாக்குறுதி அளித்தார். முன்னதாக முன்னாள் அமைச்சர் சிவபதி பேசும்போது கடந்த அதிமுக ஆட்சியில் எண்ணற்ற சாதனைகளை பொதுமக்களுக்கு செய்துள்ளோம். கொரோனா பேரிடர் காலத்தில் 2000 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அதிமுக அரசு உங்களுக்காக செய்துள்ளது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் இலவச லேப்டாப், இலவச மிக்ஸி கிரைண்டர் ஏழைகளுக்கு ஆடு மாடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது எனவே பொதுமக்களாகிய நீங்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதிமுக வேட்பாளர் பிரச்சார பயணத்தின் போது தொண்டர்களும் பொதுமக்களும் பட்டாசு வெடித்தும் ஆரத்தி எடுத்தும் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் அண்ணாவி, முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு, முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு .மல்லிகா சின்னசாமி. ஒன்றிய செயலாளர் ஜெயம், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், முக்கிய நிர்வாகிகள் செங்கமலை, யோகநாதன், எம் கே சுப்பிரமணியன் மற்றும் எஸ் டி பி ஐ, புதிய தமிழகம், புரட்சி பாரதம் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.