சொன்ன சொல்லை காப்பாற்றுவேன், தமிழகத்தில் 1.60 கோடி பேருக்கும் மகளிர் உரிமைத் தொ கை. அருண் நேருவை ஆதரித்துஅமைச்சர் உதயநிதிஸ்டாலின் பிரசாரம்.
சொன்ன சொல்லை காப்பாற்றுவேன், தமிழகத்தில் 1.60 கோடி பேருக்கும் மகளிர் உரிமைத் தொ கை. அருண் நேருவை ஆதரித்துஅமைச்சர் உதயநிதிஸ்டாலின் பிரசாரம்.
‘‘இன்னும் ஐந்து, ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு, 100 சதவீதம் தகுதி வாய்ந்த 1 கோடியே 60 லட்சம் மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்,’’ என்று அமைச்சர் உதயநிதி பேசினார்.
பெரம்பலுார் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மண்ணச்சநல்லூர், பெரம்பலூர், துறையூர், முசிறி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர், பேசியதாவது:-
தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி சொன்னதை போல், தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்வதை செய்வார். செய்வதைத் தான் சொல்வார். வாயால் வடை சுடும் பிரதமர் மோடி, அவர் சுட்ட வடையை அவரே சாப்பிட்டு விடுவார். இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால், ஒரு காஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கும், பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 65 ரூபாய்க்கும் தருவதாக, ஸ்டாலின் வாக்குறுதி கூறியிருக்கிறார். அனைத்து டோல்கேட்டுகளும் அகற்றப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
தி.மு.க., வேட்பாளரை 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து விட்டால், மாதம் இரண்டு முறை பெரம்பலுார் தொகுதிக்கு வந்து, உங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துக் கூறி நிறைவேற்றுவேன்.
நான் கருணாநிதி பேரன், சொன்ன சொல்லை காப்பாற்றுவேன். நீங்கள், நான் அனைவரும் ஈவெ.ரா., அண்ணா, கருணாநிதி ஆகியோரின் லட்சிய பேரன்கள். தமிழகத்தின் ஒட்டுமொத்த குடும்பமும் கருணாநிதி குடும்பம் தான். பிரதமர் மோடிக்கு ஒரே குடும்பம், நெருங்கிய நண்பர் அதானியின் குடும்பம் தான். மோடி பிரதமரான பின், அதானி கம்பெனி ஆயிரம் மடங்கு வளர்ச்சியடைந்து, உலக பணக்காரர் பட்டியலில் 2வது இடத்துக்கு வந்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றைக் கூட பொதுத்துறையாக்காத மோடி, பொதுத் துறை அனைத்தையும், அதானியிடம் கொடுத்து விட்டார்.
ஆளுக்கு தகுந்தாற் போல் பேசும் பழனிச்சாமி, எப்போது பார்த்தாலும் கல்லை துாக்கி காட்டுகிறார், என்று என்னை விமர்சனம் செய்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை, இந்த கல்லை காட்டி ஞாபகப்படுத்திக் கொண்டு தான் இருப்பேன். மத்திய அரசு நிதியில், ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடித்து செயல்பாட்டுக்கு வந்து விட்டன. கொரோனா பரவலை தடுக்க ஊசி போட வேண்டும், என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் தலைவர் ஸ்டாலின். அவர், கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றி உள்ளார்.
தேர்தல் முடிந்தவுடன், ஐந்து, ஆறு மாதங்களில் குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, 100 சதவீதம் தகுதி வாய்ந்த 1 கோடியே 60 லட்சம் மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். இவை அனைத்து நடப்பதற்கு, தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புக்கு, ஒரு பைசாக் கூட இழப்பீடு கொடுக்காத பிரதமர் மோடியை, 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும்.
2021ல் அடிமைகளை விரட்டியடித்து, தமிழகத்தில் விடியல் ஆட்சியை கொடுத்தீர்கள். அதே போல், வரும் தேர்தலில், அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட யூனியன் சேர்மன் குன்னம் சி. இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், ஆர்.அருண், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினவேல் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.