சீர்மரபினர்களுக்கு ஒற்றைச் சான்று பெற பார்லிமென்ட்டில் குரல் எழுப்புவதுடன் முதல் ஆளாக நானே விண்ணப்பித்து சான்று பெறுவேன். தேனி எம்.பி., உறுதி.
சீர்மரபினர்களுக்கு ஒற்றைச் சான்று பெற பார்லிமென்ட்டில் குரல் எழுப்புவதுடன் முதல் ஆளாக நானே விண்ணப்பித்து சான்று பெறுவேன். தேனி எம்.பி., உறுதி.
தேனி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க., எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் சேடபட்டி ஒன்றிய கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
எ.கன்னியம்பட்டியில் நன்றி அறிவிப்பு கூட்டம் தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்தது. சேடப்பட்டி ஒன்றியச் செயலாளர்கள் ஜெயச்சந்திரன், செல்வபிரகாஷ், சங்கரபாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், உசிலம்பட்டி நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், எழுமலை பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்.பி., பேசுகையில், ”சீர்மரபினர்களுக்கு ஒற்றைச் சான்று பெற பார்லிமென்ட்டில் குரல் எழுப்புவதுடன் முதல் ஆளாக நானே விண்ணப்பித்து சான்று பெறுவேன். வைகை அணையின் திருமங்கலம் பிரதான கால்வாயிலிருந்து பெருங்காமநல்லுார், காளப்பன்பட்டி பகுதி கிளைக்கால்வாய் துார்ந்து போய்விட்டதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், பெருங்காமநல்லுாரில் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி மையம் துவக்கவும், வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கவும், மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களுக்கு கிடைக்கவும் குரல் கொடுப்பேன் என்றார்.