எனக்கு வாய்ப்பு தந்தால் பெரம்பலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் உறுதி.
எனக்கு வாய்ப்பு தந்தால் பெரம்பலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் உறுதி.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் நெடுங்கூரில் காலை பிரசாரத்தை தொடங்கினார்.
இதனை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப. குமார் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நான்காண்டுகள் பொற்கால ஆட்சியை தந்தவர் எடப்பாடி கே. பழனிச்சாமி. திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது. போதை கலாச்சாரத்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் மூன்று ஆண்டுகளில் திமுக அரசு மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது.
ஆகவே மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் அமைய முன்னோட்டமாக இந்த தேர்தல் அமைய சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். சந்திரமோகனின் வெற்றி உங்கள் எதிர்கால சந்ததியினரை காப்பாற்றும் என்றார்.
வேட்பாளர் சந்திரமோகன் பேசும்போது,
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்த்து மீண்டும் ஏமாந்து விடாதீர்கள்.
நீட் தேர்வை கொண்டு வந்தவர்கள் இப்போது நீட் தேர்வை ரத்து செய்வோம். மாநிலங்களுக்கு விலக்கு அளிப்போம் என்றெல்லாம் கூறுவது வேடிக்கையாக உள்ளது. திமுகவினர் மக்கள் பிரச்சனைகளில் அக்கறை காட்டாமல் அரசியல் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். அதிமுகவினர் வாக்களிக்கும் மக்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள்.
எனக்கு ஒரு வாய்ப்பு தந்தால் இந்த தொகுதியை முன்மாதிரிமாற்றிக் காட்டுவேன். உங்களுக்கு என்றென்றும் விசுவாசமாக இருந்து மக்கள் பணியாற்றுவேன் இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நெய் குளம் ,சிறுகளப்பூர், தாப்பாய் ,வரகுப்பை, புள்ளம்பாடி கல்லக்குடி பேரூராட்சி கோவண்டாகுறிச்சி ,விரகாலூர், ஆலம்பாக்கம், தின்னக்குளம் , வெள்ளனூர், சங்கேந்தி, ஆலம்பாடி மேட்டூர் ,அலுந்தலைப்புர் கீழரசூர் மேலரசூர் கல்லகம் ,மால்வாய், கண்ணனூர் ,ஊட்டத்தூர், தெரனிபாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் தீவிர பிரச்சாரம் செய்தார் . இறுதியாக தரணி பாளையம் கிராமத்தில் பிரசாரத்தை முடித்தார்.
பிரச்சாரத்தின் போது ஒன்றிய செயலாளர் சிவக்குமார் ,ராஜாராம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம் பாலன் , மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி ,நகர செயலாளர்கள் கல்லக்குடி பிச்சைபிள்ளை, புள்ளம்பாடி ஜேக்கப் அருள்ராஜ் மாவட்ட மகளிர் அணி செல்வ மேரி ஜார்ஜ் உள்பட ஒன்றிய மாவட்ட கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பல்வேறு கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.