நாம் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் மக்களுக்குண்டான அதிகாரத்தை நாம் மீட்டெடுக்கலாம். வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா கோரிக்கை.

நாம் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் மக்களுக்குண்டான அதிகாரத்தை நாம் மீட்டெடுக்கலாம். வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா கோரிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் வள்ளுவர் சிலை அருகில் உள்ள யாதவர் சமுதாய மண்டபத்தில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் தேனி மாவட்ட செயலாளர் சி. பழனியப்பன் யாதவ், பாலசுப்பிரமணியம் யாதவ் முன்னிலையில். தேனி மாவட்ட தலைவர் கிருஷ்ணப்ப யாதவ் தலைமையிலும் நடந்தது. விஜயசாரதி யாதவ் வரவேற்புரை நிகழ்த்தினார் .

பொதுச் செயலாளர் வேலு மனோகரன் யாதவ் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் பொட்டல் துரை யாதவ், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கேலக்ஸி பாலா யாதவ், நல்லமணி மணிமாறன்,கருணாநிதி, நாட்டமை ஜெயக்குமார். ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஏராளமான இளைஞர்களும் பெண்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த யாதவ சமுதாய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா மற்றும் மாநில இளைஞரணி இணை செயலாளர் M.P.ராஜ்குமார் தேனி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியகுளம் பிரபு, ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது இரண்டு சமூகமும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நமக்குண்டான அதிகாரத்தை மீட்டெடுக்கலாம் என்றும், யாதவ அமைப்பினர் கருத்து சொல்ல, அதற்கு பந்தல் ராஜா பல இடங்களில் நாம் ஓட்டு வங்கியாக இருக்கிறோம். அனைத்து கட்சிகளுமே ஓட்டு வங்கியாகவே நம்மை பயன்படுத்தி கொண்டு நமக்குண்டான அதிகாரத்தை கொடுக்க மறுக்கிறார்கள். நமக்குண்டான அதிகாரத்தை , நாம் பெறணும்னா நாம் ஒன்று சேரவேண்டும் என்றும், தமிழ்குடியாக நாம் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் மக்களுக்குண்டான அதிகாரத்தை நாம் மீட்டெடுக்கலாம் என்றும் வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜாவும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்