34 வார்டில் திமுக கவுன்சிலர் மண்டி சேகர் தலைமையில் தீப்பெட்டி சின்னத்திற்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு.

34 வார்டில் திமுக கவுன்சிலர் மண்டி சேகர் தலைமையில் தீப்பெட்டி சின்னத்திற்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திமுகவினர் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 34 வது வார்டு கவுன்சிலர் மண்டி சேகர் எனும் ராஜசேகர் தலைமையில் 35 வது வார்டு கம்யூனிஸ்ட் கவுன்சிலர் சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் பாபு, மதிமுகவினர்,  கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் எடத்தெரு காளியம்மன் கோவில் தெரு, மேல கிருஷ்ணன், கீழ கிருஷ்ணன் கோவில் தெரு, மற்றும் குறுக்கு தெருக்கள் , துரைசாமி புரம் பிரதான பகுதி மற்றும் ஆறு குறுக்குத் தெருக்கள் பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கி தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டு கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்