கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவர் கொடுமையால் பெண் ஒருவரும், குடும்ப பிரச்சனை காரணமாக ஆண் ஒருவரும் தீக்குளிக்க முயற்ச்சி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவர் கொடுமையால் பெண் ஒருவரும், குடும்ப பிரச்சனை காரணமாக ஆண் ஒருவரும் தீக்குளிக்க முயற்ச்சி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வண்டிகுடியிருப்பை சேர்ந்த சுதா என்ற பெண்மணி தன்னுடைய மூன்றாவது கணவர் தன்னை கொடுமைப் படுத்துவதாக கூறி தீக்குளிக்க முயற்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அஞ்சுகிராமத்தை சேர்ந்த சின்னத்துரை என்பவரும் குடும்பபிரச்சணை காரணமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்ச்சி செய்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டு இடங்களிலும் இரண்டு நபர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.