சிவகங்கையில் பொது இடங்களில் சில கல்லூரி மாணவர்கள் கஞ்சா, மது போதையில் அட்டுழியம். பொது மக்கள் அச்சம் காவல்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
சிவகங்கையில் பொது இடங்களில் சில கல்லூரி மாணவர்கள் கஞ்சா, மது போதையில் அட்டுழியம். பொது மக்கள் அச்சம். காவல்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் கல்லூரி மாணவர்கள் சிலர் தமிழ்நாடு விளையாட்டு மைதானம் எதிர்ப்புறம் உள்ள வேளாண்மை துறை அக்ரோ பின்புறம் உட்கார்ந்து கொண்டு கஞ்சா, மற்றும் மது, புகை போன்றவற்றை பயன்படுத்தி வருவதோடு அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து அட்டூழியம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதனால் அந்த பகுதிக்கு செல்லவே மக்கள் அச்சமாகவும் பயமாகவும் இருக்கின்றது என்கிறார்கள். தொடர்ந்து அட்டூழியம் செய்து வரும் மாணவர்கள் மீது மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.