தென்காசி மேலகரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமத்துவ பொங்கல் விழா.
தென்காசி மேலகரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமத்துவ பொங்கல் விழா.
தென்காசி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சார்பில்
தமிழர் திருநாளாம் தைத்திருநாள்
சமத்துவ பொங்கல் விழா தென்காசி அருகே மேலகரம்
ஏ.கே.ரிபாயி சாஹிப் நினைவு கொடி கம்பம் அருகில்
மாவட்ட கௌரவ ஆலோசகர் நன்னகரம் சாகுல் ஹமீது
தலைமையில் நடைபெற்றது.
தென்காசி தொகுதி செயலாளர் முகம்மது அலி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் எம்.அப்துல் அஜீஸ்,மாவட்டச் செயலாளர் ஏ.செய்யது பட்டாணி ஜமாத் கமிட்டி தலைவர் திவான் கான் முஸ்லிம் லீக் நகரத் தலைவர் முகம்மது ரபிக், திமுக நகரச் செயலாளர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு விருந்தினர்களாக
மேலகரம் பேரூராட்சி தலைவர் எம்.வேணி மீரான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர்
டாக்டர் எம். அப்துல் அஜீஸ்
மாநில துணை அமைப்புச் செயலாளர்,
கிறுஸ்தவ நல்லெண்ண இயக்கம்.
பி.சாந்தசீலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் இறுதியாக பேராசிரியர்
விவேகானந்தன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேலகரம் பேரூராட்சி உறுப்பினர் சுமித்ரா பார்த்திபன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக ஏ.கே ரிபாய் சாகிப் நினைவு கொடி கம்பத்தில் முஸ்லிம் லீக்கின் பச்சிளம் பிறை கொடி ஏற்றப்பட்டது.