திருச்சியில் இருந்து டெல்லி, கொச்சி நகரங்களுக்கு விமான சேவை, விமான நிலைய ஆலோசனை குழு கூட்டத்தில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ பேச்சு
திருச்சியில் இருந்து டெல்லி, கொச்சி நகரங்களுக்கு விமான சேவை, விமான நிலைய ஆலோசனை குழு கூட்டத்தில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ பேச்சு.
திருச்சி விமான நிலைய வளர்ச்சி குறித்த ஆலோசனை குழு கூட்டம் நேற்று நடந்தது .கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பேசியதாவது:-
திருச்சி விமான நிலையத்தில் போலீஸ் உள்ள பூத்களில் ஒருவர் மட்டுமே பணி யில் உள்ளார். எனவே சிஐஎஸ்எப் வீரர்களுடன் ஒருங்கிணைந்து, உள்ளூர் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். வாகனங்களுக்கான நுழைவு கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.
தற்போது, பெய்த மழையில், விமான நிலைய வளாகத்தில் போதிய வடிகால் இல்லா ததால், கொட்டப்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் சூழ்ந்தது. எனவே திருச்சி விமான நிலையத் தில் குடியிருப்புகள் பாதிக் கப்படாத வகையில், வடி கால் அமைக்க வேண்டும். பயணிகளிடம் அத்துமீறும் சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சியில் இருந்து, டில்லி, கொச்சி நகரங்களுக்கு விமான சேவை அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.