கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் தலைவர் பொன் குமார் பேட்டி:

கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் தலைவர் பொன் குமார் பேட்டி:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு சொத்துவரி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் அது உயர்த்தப்படாததால் தற்பொழுது ஒன்றிய அரசு திமுக அரசிற்கு சொத்து வரியை உயர்த்த வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறது. அதன் காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான தொழில் முடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவே தமிழக முதலமைச்சர் இதில் கவனம் செலுத்தி அந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் வெள்ளத்தால் ரூ.6000 கோடிக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு ரூ 2000 கோடி நிதி கேட்டால் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழக்கமாக வழங்க வேண்டிய ரூ.900 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு அரசியல் பார்க்காமல் தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்