விதிமுறைகளின்படி வருமான வரி படிவம் தாக்கல் செய்தால் வரிவிலக்கு பெறுவது எளிது. திருச்சி கூட்டத்தில் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் பேச்சு.

விதிமுறைகளின்படி வருமான வரி படிவம் தாக்கல் செய்தால் வரிவிலக்கு பெறுவது எளிது. திருச்சி கூட்டத்தில் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் பேச்சு.

கூட்டுறவு சங்கங்கள் சரியான தேதிக்குள் வருமான வரி படிவத்தை விதிகளுக்கு உட்பட்டு தணிக்கை செய்து தாக்கல் செய்தால் வரி விலக்கு எளிதாக பெறமுடியும் என்று மதுரை மண்டல வருமானவரித்துறை முதன்மை ஆணையர் த. வசந்தன் கூறினார்.

திருச்சி வருமானவரித்துறை சார்பில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான (பிஏசிசிஎஸ்) விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
மதுரை மண்டல வருமானவரித்துறை முதன்மை ஆணையர் த. வசந்தன் பேசியதாவது:-

கூட்டுறவு இணை ஆணையர் வேண்டுகோளூக்கிணங்க இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கூட்டுறவு சங்கங்கள் சரியான தேதிக்குள் வருமான வரி படிவத்தை விதிகளுக்கு உட்பட்டு தணிக்கை செய்து தாக்கல் செய்யும் பட்சத்தில் வரி விலக்கை எளிதாக பெறமுடியும். குறிப்பாக, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க சட்ட பிரிவு 80ன் படி, முறையான கணக்குப் புத்தகங்களைப் பராமரிப்பதும், சட்டப்பூர்வ தணிக்கையாளர்களால் அத்தகைய கணக்குப் புத்தகங்களை தணிக்கை செய்வதும் அவசியம். அவ்வாறு கணக்குப் புத்தகங்களைப் பராமரிக்கவோ, தணிக்கை செய்யவோ தவறினால், அது இரு சட்டப்பிரிவுகளையும் மீறுவதற்கு சமம். அதைப்போல விற்றுமுதல் ரூ.1 கோடிக்கு மேல் இருந்தால், வருமான வரிச் சட்ட பிரிவு 44 ஏபி இன் படி, கணக்குப் புத்தகங்களைப் பராமரிக்கவும், வரித் தணிக்கை செய்யவும் வருமான வரிச் சட்டம் பரிந்துரைக்கிறது .
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், வருமான வரி சட்ட பிரிவு 139(1)ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் வருமான வரி படிவத்தை தாக்கல் செய்வதின் முக்கியத்துவம் குறித்தும், பிரிவு 80 பி}யின் விலக்கு, வருமான வரி மின்}தாக்கல் போர்ட்டலில் தொலைபேசி எண் பதிவிடுதல் மற்றும் மின்னஞ்சல் முகவரியை புதுப்பித்தல், மின்}தாக்கல் போர்டல் மூலம் அனுப்பும் தகவல்களுக்கு எளிதில் பதில் அளிக்க முடியும். இந்த தகவல் கிடைத்த 30 நாள்களுக்குள் முறையீடுகளை உரிய நேரத்தில் தாக்கல் செய்தல், வரிக் கோரிக்கைகளை உரிய நேரத்தில் செலுத்துதல் உள்ளிட்டவை குறித்தும்
மதுரை மண்டல வருமானவரித்துறை முதன்மை ஆணையர் த. வசந்தன்
விவரித்தார்.

நிகழ்வில் தொடர்ந்து, வருமானவரிச்சட்டம், 1961 இன் பொருந்தக்கூடிய விதிகள் குறித்து, திருச்சி வருமான வரி கூடுதல் ஆணையர் நித்யா துரைராஜ் காட்சிகள் மூலம் விளக்கமளித்தார். வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தக்கூடிய வருமானவரிச்சட்டம், 1961 இன் விதிகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வருமான வரித்துறை இணை ஆணையர் கே.ஆர். கருப்பசாமி பாண்டியன், திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் அரசு, திருச்சி அமராவதி கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் திருப்பதி, வருமான வரி அலுவலர் வள்ளியம்மை, மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கூட்டுறவு இணை பதிவாளர்கள், கூட்டுறவு துறை வங்கி நிர்வாகிகள், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருச்சி மண்டல கூட்டுறவு துறை இணை பதிவாளர் ஜெயராமன் வரவேற்றார். வருமான வரி அலுவலர் ஜான் ரஸல் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்