வெறும் 150 ரூபாய் இருந்தால் போதும் பாண்டிச்சேரி முழுவதும் 21 சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க முடியும்.
பாண்டிச்சேரி சிட்டி டூர் பஸ்
நீங்கள் பாண்டிச்சேரி வந்தால் பாண்டிய சுற்றி பார்க்க 500, 1000 கொடுத்து பைக் வாடகைக்கு எடுக்க தேவையில்லை. வெறும் 150 ரூபாய் இருந்தால் போதும் பாண்டி முழுவதும் 21 சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க முடியும்.
இந்த சுற்றுலா பேக்கேஜின் மூலம் நீங்கள் புதுவையின் 21 சுற்றுலாத் தலங்களை சுலபமாக சுற்றிப் பார்க்கலாம். இட்ன்ஹா சுற்றுலா பேக்கேஜின் பெயர் ‘ஹாப் ஆன், ஹாப் ஆப்’ (Hop on, Hop off) என்பதாகும். இந்த டூர் பேக்கேஜ் வெளியூரில் இருந்து புதுவைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து 8.30 புறப்படும் இந்த பேருந்துகள் உங்களுக்கு 21 சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்து செல்கின்றன!
1. புதுவை பொட்டானிக்கல் கார்டன்
2. தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா
3. பாண்டி மெரீனா பீச்
4. பாரதி பூங்கா
5. அரவிந்தர் ஆசிரமம்
6. அரவிந்தோ சொசைட்டி காகித தயாரிப்பு நிறுவனம்
7. மணக்குள விநாயகர் கோயில்
8. முருங்கப்பாக்கம் கைவினை கிராமம்
9. அரிக்கன்மேடு
10. சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை
11. சுண்ணாம்பாறு படகு குழாம்
12. சிங்கிரி லட்சுமி நரசிம்மர் கோயில்
13. திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயில்
14. வில்லியனூர் திருக்காமீசுவரர் கோயில்
15. வில்லியனூர் மாதா கோயில்
16. ஊசுடு பறவைகள் சரணாலயம்
17. பாண்லே பால் பண்ணை
18. ஆரோவில் மாத்ரி மந்திர்
19. ஆரோவில் கடற்கரை
20. காமராஜர் மணிமண்டபம்
21. லாஸ்பேட்டை அப்துல் கலாம் கோளரங்கம்
இதற்கான டிக்கெட்டுகள் புதுவை பேருந்து நிலையத்தில் உள்ள PRTC கவுண்டர்களில் இருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.