ஓரிக்கையில் காஞ்சி மடாதிபதி சாதுர்மாஸ்ய விரதம்
ஓரிக்கையில் காஞ்சி மடாதிபதி சாதுர்மாஸ்ய விரதம்
சென்னை, இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஓரிக்கை மகாபெரியவர் மணி மண்டபத்தில், நாளை துவக்குகிறார்.
காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காசி யாத்திரையை பூர்த்தி செய்து, ராமேஸ்வரத்தில் இருந்து, 18ம் தேதி புறப்பட்டு, திருச்சி, திருவானைக்காவலில் உள்ள சங்கர மடத்திற்கு சென்றார். அங்கு மூன்று நாட்கள் தங்கி, அருளாசி வழங்கினார்.
இன்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவம் நடத்தப்பட்ட பின், மாலையில் விழுப்புரம் சங்கர மடத்திற்கு செல்கிறார்.
நாளை காலை, காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மகாபெரியவர் மணிமண்டபம் செல்லும் அவர், இந்த ஆண்டுக்கான சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்கிறார் என, சங்கர மடம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.