காரைக்குடியின் புதிய பேருந்து நிலையத்தின் அவல நிலை. சீர்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள்
காரைக்குடியின் புதிய பேருந்து நிலையத்தின் அவல நிலை. சீர்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளது புதிய பேருந்து நிலையம். இதன் உள்ளே நுழையும்போதே மனித மூத்திரத்தின் நாற்றம் குடலை பிரட்டிவிடும்..
பேருந்து வெளியேறும் பகுதியில் உள்ள பொது சிறுநீர் கழிக்கும் இடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பேருந்து நிலைய முகப்பில் திறந்தவெளி கால்வாயாக விட்டு அந்த கால்வாய் மாநகராட்சி அலுவலகத்தை கடந்து பூங்கா வழியாக திரும்பி மனோகரன் டாக்டர் மருத்துவமனை பின்புறமுள்ள கால்வாய் வரை இந்த கழிவுநீர் திறந்த வெளியாகவே சென்றடைகிறது..
இதனால் நாற்றம் அந்த ஏரியாவே வீசுகிறது..இந்த கழிவு நீரை இந்த சிறுநீர் கழிக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே உள்ள பாதாள சாக்கடை இணைப்போடு சேர்ந்து விட்டால் இந்த மோசமான நாற்றம் இருக்காது. அதேபோல இந்த சிறுநீர் கழிக்கும் இடத்தில் தண்ணீர் வசதியே இல்லை. அடுத்து பேருந்து நிலையம் வரும் பயணிகள் தங்கள் தாகத்திற்கு குடிப்பதற்கென்று வசதிகள் இருக்கிறதா என்றால் இல்லை தண்ணீர் இயந்திரம் பழுதடைந்து இதுநாள்வரை தண்ணீர் இணைப்பே கொடுக்கப்படவில்லை. அது பழுதடைந்து பல வருடங்களாகியும் இதுவரை பழுதும் நீக்கப்படவில்லை..
அதுபழுது நீக்கப்பட்டால் அங்கே உள்ள கடைகளில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை ஆகாதாம் அதனால் மநகராட்சி நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.
அதேபோல பேருந்து நிலையத்தில் ஒரு ஹைமாஸ் விளக்கு உள்ளது..
அதில் பொருத்தியுள்ள விளக்குகள் பவர் குறைவானதை பொருத்தியுள்ளதால் அந்த விளக்கின் வெளிச்சம் போதவில்லை..
இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் தங்கும் விடுதியாக இந்த பேருந்து நிலையம் அந்த சமூகவிரோத கும்பலுக்கு பயன்படுகிறது..
அங்கே நள்ளிரவில் வந்து பேருந்தில் இருந்து இறங்குபவர்களின் பொருள்களை திருடுவதற்காகவே சில சமூக விரோத கும்பல்கள் குடும்பமாக அங்கேயே இரவுமுழுவதும் தங்கி விடுகின்றனர்..
பலமுறை பொதுமக்களின் உடமைகள் அங்கே திருடு போயிருக்கின்றன..
வெளியூரில் இருந்து காரைக்குடிக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக இந்த அவலநிலையை பற்றி விமர்சிக்காமல் செல்வதே இல்லை..
மாநகராட்சி அலுவலகம் அருகிலேயே இருந்தும் இந்த பேருந்து நிலையம் இவ்வளவு குறைகளுடன் மோசமானநிலையில் இருக்கிறது. இந்த மோசமான நிலையை விரைவில் மாநகராட்சி நிர்வாகம் சரிசெய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.