காதலரை கரம் பிடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்: டிசம்பரில் கோவாவில் திருமணம்.
காதலரை கரம் பிடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்: டிசம்பரில் கோவாவில் திருமணம்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களின் திருமணம் வரும் டிசம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கோவாவில் நடைபெறுகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். ‘தெறி’ ரீமேக்கான ‘பேபி ஜான்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமாக இருக்கிறார். தமிழில் அவர் நடிப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’ வெளியாக இருக்கிறது. தெலுங்கில் வெளியான ‘மகாநடி’ படத்துக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷும், ஆண்டனியும் கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒரே பள்ளியில் படித்த இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியுள்ளனர்.
கொச்சியில் உள்ள தனியார் கல்லூரியிலும் நடிகை கீர்த்தி சுரேஷும், ஆண்டனியும் ஒன்றாக படித்ததாக கூறப்படுகிறது. பள்ளியில் தொடங்கி இன்றுவரை இருவரும் காதலர்களாக பயணித்து வருகின்றனர். இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் கோவாவில் வரும் டிசம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டனியை பொறுத்தவரை கேரளாவில் உள்ள ரெசார்ட் ஒன்றின் உரிமையாளர் என்றும், துபாயில் தொழிலதிபராக இருப்பதாகவும் கூறப்படுகிறது