பழங்குடியின குழந்தைகளை மகிழ்வித்த கேரள முதல்வர்.
கேரளா மாநி நிலம்பூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடியிருப்புப் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் இன்று முதல்வர் பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரெசிடென்ஷியல் வித்யாலயா, பள்ளி, சமக்ரா சிக்ஷா கேரளா மலப்புரத்தின் தலைமையில் பழங்குடியின குழந்தைகளின் நலனை உறுதிசெய்யும் வகையில் செயல்படும் பள்ளியாகும். இங்கிருந்து 43 சிறந்த மாணவர்களும் அவர்களது ஆசிரியர்களும் இன்று தலைமை செயலகத்தை அடைந்தனர். அவர்கள் முதல்வர் பிரனாயி விஜயனை சந்தித்து பல கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பு அனைவருக்கும் மிகவும் இதமாக இருந்திருக்கிறது.