சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம்; போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.
சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம்; போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.
ஆயுதப்படை முகாமில் நன்னடத்தை பயிற்சி அளிக்க டிஜிபி உத்தரவு.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 18ம் படியை பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் பக்தர்களுக்கு மட்டுமே இதில் ஏற அனுமதி உண்டு. சபரிமலை தந்திரிகள், மேல்சாந்தி மற்றும் பந்தளம் மன்னர் பிரதிநிதிகள் ஆகியோருக்கு மட்டுமே இருமுடி இல்லாமல் 18ம் படியில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் அனுமதி உண்டு.
புனிதமான 18ம் படியில் வயதான பக்தர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் வரும்போது அவர்களை ஏற்றி விடுவதற்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் படியில் அமர்வதற்கோ, பின்புறமாக திரும்பி நிற்பதற்கோ அனுமதி கிடையாது.
.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தங்களது பணிக்காலம் முடிந்து திரும்பிய 30க்கும் மேற்பட்ட போலீசார் 18ம் படியில் நின்று குரூப் போட்டோ எடுத்த விவகாரம் கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.