21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கோம்பை அருள்மிகு திருமலைராயப் பெருமாள் திருக்கோவில் திருவிழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கோம்பை அருள்மிகு திருமலைராயப் பெருமாள் திருக்கோவில் திருவிழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தேனி மாவட்டம் கோம்பை மலையடி வார பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு திருமலை ராயப்பெருமாள் திருக்கோவில். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் சுயம்பு வடிவில் உருவமாய் பெருமாள் அவதரித்துள்ளார்.
மேலும் சைனவக்கோளத்தில் காட்சியளிக்கும் பெருமாளுக்கு ஆண்டு தோறும் வைகாசி மாதங்களில் விசாகத் திருவிழா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நான்கு வீதிகளில் திருத்தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2003 ஆம் வருடம் திருத்தேர் விழா நடைபெற்றது .21 ஆண்டுகளுக்கு முன்பு திருவிழாவில் நடைபெற்ற கலவரத்தினால் நீதிமன்றம் பேரோட்டத்திற்கு தடை விதித்திருந்தனர்.
தற்போது தடை நீங்கி தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வைகாசி விசாக திரு தேரோட்டம் முதல் நாளான இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு இரண்டு வீதிகளில் உலா வந்த திருத்தேரினை கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று திருத்தேர் வீதி உலா வந்து நகரின் மையப் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாளாக நாளை இரண்டு வீதிகளில் திரு தேரோட்ட விழா நடைபெற்று திருத்தேர் நிலை நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து சென்றனர்.