கொத்தடிமை இல்லா மாவட்டத்தை உருவாக்குவோம்! சிவகங்கையில் மாவட்ட ஆட்சித்தலைவர், நகர்மன்ற தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொத்தடிமை இல்லா மாவட்டத்தை உருவாக்குவோம்! சிவகங்கையில் மாவட்ட ஆட்சித்தலைவர், நகர்மன்ற தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு, கையெழுத்து இயக்கம், உறுதிமொழி இயக்கம் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் நகர்மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த், மற்றும் நகர் மன்ற உறுப்பினர். அயூப்கான், அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து சிவகங்கை பேருந்து நிலையத்தை நகர் மன்ற தலைவர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.