*கிளியனூர் பகுதியில் புதுவை சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது*
*கிளியனூர் பகுதியில் புதுவை சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது*
விழுப்புரம்:புதுச்சேரி மாநிலம் காட்டேரிகுப்பத்தை சேர்ந்தவர் சூர்யா(வயது 24). இவர் கடந்த 6-ந் தேதி கொந்தமூர் மேல்நிலை பள்ளி அருகே சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.
இவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் வைப்பதற்காக விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாசிடம் கிளியனூர் போலீசார் அனுமதி கேட்டனர்.போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் இதனை மாவட்ட கலெக்டர் பழனிக்கு பரிந்துரை செய்தார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பழனி அனுமதி அளித்ததின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.