தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி மதுரை மாணவர்கள் தேர்வு.
தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி மதுரை மாணவர்கள் தேர்வு.
மதுரை: சென்னையில் நடந்த ஜி.பி.சி.பி., அமைப்பின் தமிழக ஜிம்னாஸ்டிக் அணிக்கான 12 வயதுக்குட்பட்டோர் தேர்வு போட்டியில் மதுரை மாணவர்கள் 9 பேர் தேர்வாகினர்.
ஒய்.எம்.சி.ஏ. பள்ளி மகாலட்சுமி, விகாசா பள்ளி அக் ஷரா, மகாத்மா பள்ளி தான்யா, தமிழினி, சி.இ.ஓ.ஏ., பள்ளி வர்ஷினி, மாசாத்தியார் பள்ளி ஜாபினா ரீமாஸ், மஞ்சணக்காரர் பள்ளி மொஹமத் ரீனாப், ஜோசப் பள்ளி புகழேந்தி, ஜோதி பள்ளி ஹரிஉமேஷ் ஆகியோர் தேர்வாகினர்.
இவர்கள் ஐதராபாத் காடியம் சர்வதேச பள்ளியில் ஜூலை 27, 28 ல் நடக்கவுள்ள தேசிய லெவல் 1 ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்கின்றனர்.
மதுரை ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க செயலாளர் கருணாகரன், பயிற்சியாளர்கள் ரோஹித், சவுமியா வாழ்த்தினர்.