தென்காசி மாட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளருக்கு மேஜர் ரவிக்குமார் வேண்டுகோள்.
தென்காசி மாட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளருக்கு மேஜர் ரவிக்குமார் வேண்டுகோள்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலிஸ் சரகம் நெட்டூர் 6 வது வார்டு கலைஞர் படிப்பகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பிற்க்காக தன்னார்வ தொண்டர்களால் அமைக்கப்பட்ட C C T V
கேமரா ஒயர்கள் மானிட்டர் சேமிக்கும் புட்டேஜ் , ஆகியவற்றை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தி செயல் இழக்க செய்துள்ளனர். மேலும் கலைஞர் படிப்பக சுவரில் பொது மக்கள் பாதுகாப்பிற்க்காக சுவரில் பெயிண்டால் எழுதப்பட்ட ஆலங்குளம் காவல் நிலைய போன் நம்பர் மற்றும் சட்ட ஆலோசகர் பெயர் ஆயுதத்தால் சுரண்டி அழிக்கப்பட்டுள்ளது.
அரசு பொதுமக்கள் தாகம் தீர்க்க அமைத்த குடிதண்ணீர் தொட்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதும், தொடறும் சட்டவிரோத செயல்களை கண்டறிந்து குற்றவாளிகளை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பிற்க்கு உத்திரவாதம் வழங்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கி எம்.ஜி.ஆர் கிராம கல்வி அறக்கட்டளை மேஜர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.