இயந்திரத்தினை கழட்டி பணத்தை திருட முயற்சி – எச்சரிக்கை அலார சத்தம் கேட்டதால் மர்ம நபர் தப்பி ஓட்டம்
கோவில்பட்டியில் தனியார் ஏ.டி.எம் மையத்தில் இயந்திரத்தினை கழட்டி பணத்தை திருட முயற்சி – எச்சரிக்கை அலார சத்தம் கேட்டதால் மர்ம நபர் தப்பி ஓட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே HDFC வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மைய இயந்திரத்தினை மர்ம நபர் ஒருவர் கழட்டி பணத்தை திருட முயற்சி செய்துள்ளார்.
ஏ.டி.எம் மையத்தில் எச்சரிக்கை அலார சத்தம் கேட்டதால் மர்ம நபர் தப்பி ஓடியது அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். எப்போதும் வாகனங்கள் அதிக அளவில் சென்று கொண்டிருக்கும், மக்கள் நடமாட்டம் இருக்கும் பசுவந்தனை சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் நடைபெற்ற இந்த திருட்டு முயற்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.