கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்

தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை நகர் கழக செயலாளரும்,நகர்மன்ற தலைவர் சிஎம்.துரை ஆனந்த் தலைமையில் சிவகங்கை நகர் 27 வது வார்டில் உள்ள ASP திருமண மஹாலில் இன்று மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமைசி வகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

முகாமில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர்

இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர் கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள், நகராட்சி அலுவலர்கள்,என அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்