கேரளா மாநிலம் பாலக்காட்டில் காட்டு யானை தாக்கியதில் மாத்ருபூமி ஒளிப்பதிவாளர் ஏ.வி முகேஷ் உயிரிழந்தார்.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் காட்டு யானை தாக்கியதில் மாத்ருபூமி ஒளிப்பதிவாளர் ஏ.வி முகேஷ் உயிரிழந்தார்.
முகேஷ் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியைச் சேர்ந்தவர், மறைந்த உன்னி மற்றும் தேவி தம்பதியரின் மகனாவார். அவர் மனைவியின் பெயர் திஷா.
காட்டு யானைகள் கூட்டம் ஆற்றை கடந்து சென்றதை படமெடுக்கும் போது கேமராமேன் மீது யானை தாக்கியது. உடனடியாக பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் முகேஷ் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
டெல்லி பீரோவில் நீண்ட காலம் பணியாற்றிய முகேஷ், கடந்த ஓராண்டாக பாலக்காடு பீரோவில் இருந்துள்ளார். டெல்லியில் பணியாற்றியபோது ‘ஆதிஜீவனம்’ என்ற பெயரில் மாத்ருபூமி.காமில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி வெளியாகியுள்ளன.