வெள்ளாளர் முன்னேற்ற சங்க உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஆலோசனை.
வெள்ளாளர் முன்னேற்ற சங்க உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்
பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஆலோசனை.
தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும்கழகத்தின் பாராளுமன்ற தேர்தல் குறித்து உயர் மட்ட நிர்வாகிகள் முதற்கட்ட ஆலோசனை கூட்டம் திருச்சியில் ஆர்.வி.ஹரிஹரூன்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
இதில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை. கள்ளக்குறிச்சி,திருவாரூர், தஞ்சாவூர்,திண்டுக்கல் மாவட்டங்கள் சார்பில் பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து கருத்துகளை உயர்மட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள்.
தமிழ்நாடு சோழிய வேளாளர் நல சங்கம்சார்பாக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
மேலும் தேர்தல் கூட்டணி, ஆதரவு நிலைப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆலோசனைகள் மேற்கொண்டு இறுதி முடிவை வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் & கழகத்தின் உயர் மட்ட கமிட்டி விரைவில் அறிவிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது .