ஆலங்குளம் யூனியனில் உள்ள ஊராட்சிகளை நிர்வாக வசதிக்காக பிரித்து புதிய ஊராட்சிகள் ஏற்படுத்த ஆட்சி தலைவருக்கு எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி மாநில தலைவர் மேஜர் ரவிக்குமார் கோரிக்கை.
ஆலங்குளம் யூனியனில் உள்ள ஊராட்சிகளை நிர்வாக வசதிக்காக பிரித்து புதிய ஊராட்சிகள் ஏற்படுத்த ஆட்சி தலைவருக்கு எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி மாநில தலைவர் மேஜர் ரவிக்குமார் கோரிக்கை.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் 32 ஊரட்சிகளை உள் அடக்கியதாகும். தற்போது நிர்வாக வசதிக்காக ஆலங்குளம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து புதியதாக ஊத்துமலையை தலைமை இடமாக கொண்டு 16. ஊராட்சிகளுடன் செயல்படுத்த பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் ஆகும்.
அதனால் ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள 16 ஊராட்சிகளையும் மக்கள் தொகை அடிப்படையிலும், அனைத்து தரப்பு மக்களும் உள்ளாட்சியில் உயரிய பதவிகளில் பெற்று சமநிலையில் உரிமைகள் பெற்றிட வேண்டி பல கிராமங்களை உள்ளடக்கி ஊராட்சியாக உள்ள ஊராட்சிகளை ஆய்வு செய்து மக்கள் நலன் நிர்வாக வசதிக்காக பெரிய ஊராட்சிகளை பிரித்து கூடுதலான ஊராட்சிகளை ஆலங்குளம் ஊராட்சியில் உருவாக்க வேண்டும் என்றும்,
அதன்படி கடங்கநேரி, சிவலார்குளம் , குத்த பாஞ்சான், மாறாந்தை, மாயமான் குறிச்சி, மருதம்புத்தூர் மற்றும் நாராயணபுரம் பஞ்சாயத்துகளை நிர்வாக வசதிகளுக்காகவும் மக்கள் நல திட்டங்கள் சீராக மக்களுக்கு சென்றடையவும் மேற்கண்ட பஞ்சாயத்துக்களை பிரித்து புதிய ஊராட்சி பஞ்சாயத்துக்களை உருவாக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி சார்பில் தமிக அரசுக்கும் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கும் வேண்டு கோள் விடுத்துள்ளார் மாநில தலைவர் மேஜர் ரவிக்குமார்.