ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பிற்க்காக மேல்புரம் உள்ள தரை வாடகை கடைகளை அகற்றி கூடுதல் நிழல் கூறை அமைத்து தர கலெக்டருக்கு எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி மேஜர் ரவிக்குமார் கோரிக்கை.
ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பிற்க்காக மேல்புரம் உள்ள தரை வாடகை கடைகளை அகற்றி கூடுதல் நிழல் கூறை அமைத்து தர கலெக்டருக்கு எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி மேஜர் ரவிக்குமார் கோரிக்கை.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டிய போது அமைக்கப்பட்ட நிழல் கூறை இப்போதும் பயணிகள் பயன்பாட்டுக்காக உள்ளது
அதில் பாது காக்கப்பட்ட குடிதண்ணீர் டேங்க், பெண்கள் பாலுட்டும் அறை, பஸ் டைம் கீப்பர்கள் மேஜை, பயணிகள் நிழல் கூறை என்று பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்போது ஜன தொகை பல மடங்கு பெருகி உள்ளது அதனால் தினசரி பஸ் நிலையம் வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பஸ்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கூடுதல் ஆக மினி பேருந்தும் வந்து செல்கிறது . அதற்கு ஏற்றார்போல் பொதுமக்கள் நின்று பாதுகாப்பாக வந்து செல்ல போதுமான நிழல் கூறை வசதி இல்லாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். காலை மாலையில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் நலன் கருதி தரை வாடகை கடைகளை அகற்றி கூடுதல் நிழல் கூறை அமைத்து தர மாவட்ட கலெக்டருக்கு எம்.ஜி ஆர் மக்கள் சத்தி மேஜர் ரவிக்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.