திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றிக்கு பாடுபட வேண்டும் அமைச்சர் கே என் நேரு பேச்சு.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றிக்கு பாடுபட வேண்டும் அமைச்சர் கே என் நேரு பேச்சு.

திருச்சி மத்திய வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கே என் நேரு பேசியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றால் தான் மீண்டும் தளபதி ஸ்டாலின் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்பார்.
எனவே அதற்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல் தொகுதிவாரியாக நம்முடைய தலைவர் கலைஞரின் திரு உருவ சிலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அனைத்து தொகுதிகளிலும் தலைவரின் திருவுருவ சிலைகள் விரைவில் அமைக்கப்படும்.

கலைஞர் தான் நம் அனைவரையும் உருவாக்கியவர் கலைஞர் தான் நம்மை ஆளாக்கியவர் கலைஞர் தான் நம்மை வளர்த்து எடுத்தவர். இன்றைய நிலையில் தளபதியின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறைகளை சொல்லி அடுத்து நாங்கள் தான் என்று பலர் பேசி வரும் நிலை ஏற்பட்டுள்ளது இந்த அறிவாலயத்தில் இருந்து நாங்கள் சொல்லுகிறோம் மீண்டும் தலைவர் தளபதி தான் முதல்வராக ஆட்சி பொறுப்பில் ஏறுவார். இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட சிலர் அடுத்த முதல்வர் தளபதி தான் என்று கூறுகிறார்கள்.

2026 ஆம் சட்டமன்றத் தேர்தலில் முன்னோட்டமாக நம்முடைய துணை முதலமைச்சர் திருச்சிக்கு வருகை தந்து இளைஞர் அணி கூட்டத்தில் பங்கேற்று, புதிய நூலகத்தை திறந்து வைத்து, கலைஞரின் திரு உருவ சிலையை திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார். எனவே தளபதியின் வெற்றி என்பது இந்த திருச்சியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. நிச்சயம் நம்முடைய தளபதி மீண்டும் முதல்வர் ஆவார் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்