தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் திருச்சி ஆட்சியரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் திருச்சி ஆட்சியரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.
காலதாமதம் இன்றி நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும், தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும், நியாயமான புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட வேண்டும்.
மாவட்ட தேர்வாணையக் குழு மாநில தேர்வாணைய குழு மூலம் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் வேறு மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் கணிசமான அளவில் பெண் பணியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். குறைவான சம்பளத்தில் சொந்த ஊர் மற்றும் குடும்பத்தை பிரிந்து வேலை பார்ப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, இவர்களை இவர்களது சொந்த ஊரில் அருகாமை உள்ள சங்கங்களுக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.