தவறான செய்திகளை வெளியிடும் வீணர்களுக்கெல்லாம் எனது மக்கள் பணிகளே பதில் சொல்லும். திருச்சி எம்.பி துரை வைகோ அறிக்கை.

தவறான செய்திகளை வெளியிடும் வீணர்களுக்கெல்லாம் எனது மக்கள் பணிகளே பதில் சொல்லும். திருச்சி எம்.பி துரை வைகோ அறிக்கை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை எனக்கு பெற்றுத் தந்த, திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள புதுக்கோட்டை தெற்கு, புதுக்கோட்டை வடக்கு, கறம்பக்குடி தெற்கு, கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணி நிர்வாகிகளுடன் சென்று 18.10.2024,  19.10.2024 ஆகிய இரண்டு நாட்கள், காலை 08:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை மக்களை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டேன்.

அப்போது அவர்கள் அன்றாடம்  சந்திக்கும் பல்வேறு சிரமங்களை  தெரிவித்ததுடன் கோரிக்கைகளாகவும் என்னிடம் தெரிவித்தனர். அவர்களிடம், நம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் சிறந்த ஊழியனாகவும், தொகுதியின் வளர்ச்சிக்காக மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் முழங்குவேன் என்றும் தெரிவித்துக் கொண்டேன்.

  நன்றி அறிவிப்பின் போது எந்த இடத்திலும் நான் மீண்டும் தங்களை சந்திக்க வர மாட்டேன் என்று குறிப்பிடவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் முதன்மை அலுவலகம் திருச்சியில் செயல்பட்டாலும் பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற புதுக்கோட்டையிலும் அலுவலகம் திறக்கப்பட்டு செயல்படும். இதனால் எந்நேரமும் எளிதாக என்னை தொடர்பு கொள்ள முடியும் என்று நான் பேசியதை ஒருவர்  திரித்து வெளியிட்டுள்ளார்.

 க டந்த நான்கு மாதங்களில் மட்டும் வெளிநாட்டில் வேலை பார்க்க சென்ற இடத்தில் இறந்த ஐந்து நபர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு  கொண்டு வந்துள்ளேன். அதிலும் குறிப்பாக இரண்டு நபர்கள் நமது தொகுதியை சார்ந்தவர்கள். அந்த நாட்களில் கூட தலைநகர் டெல்லியில் இருந்தபடியே வெளிநாட்டில் தொடர்பு கொண்டு,   உடல்களை கொண்டு வருவதற்கான செலவுகள் உட்பட தாமே ஏற்பாடு செய்து கொண்டு வந்தேன்.

தவறான செய்திகளை வெளியிடும் வீணர்களுக்கெல்லாம் எனது மக்கள் பணிகளே பதில் சொல்லும்.

ஆதாயமில்லா மக்கள் பணி..!

சமரசமில்லா மக்கள் நலன்..!

என்ற எனது கோட்பாட்டின் படி எனது மக்கள் பணி தொடரும்..

    இந்த நன்றி அறிவிப்பு நிகழ்வினை மிகவும் சிறப்பாக அமைத்துக்கொடுத்த திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் அண்ணன் கே. கே.செல்லபாண்டியன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் அண்ணன் எஸ். கே.கலியமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் சகோதரர் வை. முத்து ராஜா, சகோதரர்  எம். சின்னத்துரை, திராவிட முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர்கள் இராமகிருஷ்ணன், சாமிநாதன், தவ. பாஞ்சாலன், எம். பரமசிவம்,  ஒன்றிய பெருந்தலைவர்கள் சின்னையா, ஜெயலட்சுமி தமிழ்ச்செல்வன், மாலா ராஜேந்திர துரை, மறுமலர்ச்சி திமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் கா.சி.சிற்றரசு, மாவட்ட அவைத்தலைவர் கே.ஏ.ஆரோக்கியசாமி, மாவட்ட பொருளாளர் ராஜா ஆதிமூலம், ஒன்றிய செயலாளர்கள் ஞானப்பிரகாசம், மறவப்பட்டி பாண்டியன், சேது கலையரசன்,   எஸ்.வைர மூர்த்தி, சுரேஷ், பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சபரிநாதன், சந்திரசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் முத்தையா, வி. கே.மதியழகன், செல்வராணி கணேசன், மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி, கிளைச் செயலாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக இந்தியா நிர்வாகிகளுக்கும்   தோழர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொண்டேன்.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்