பெண்கள் இந்தியா அமைப்பு சார்பில், தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம். மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெண்கள் இந்தியா அமைப்பு சார்பில், தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம். மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பெண்களின் பாதுகாப்பு மனித சமுதாயத்தின் பொறுப்பு என்ற தேசிய அளவிலான தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் திருச்சி அருகே நடைபெற்றது. இதில் விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்ட துணைத் தலைவர் முமீனா பேகம் தலைமை தாங்கினார்.. மாவட்ட பொதுச் செயலாளர் சமீனா பர்வீன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரம்ஜான் பேகம் வரவேற்புரை ஆற்றினார்..
இந்நிகழ்வில் விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மண்டலத் தலைவர், மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரி மெகராஜ் பானு மற்றும் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சுற்றுச்சூழல் அணி திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ரஹ்மத்துல்லா ஆகியோர் சிறப்புரையாற்றினர்..
இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் மசூதா மரியம் நன்றியுரை ஆற்றினார்..

இந்நிகழ்வில் திரளான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு மனித சமுதாயத்தின் பொறுப்பு என்று முழக்கங்கள் எழுப்பினர்..

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்