வாட்சப்பில் q ஆர் கோடுடன் பணம் கேட்டு ஹேக் செய்யும் புதுவித மோசடி பொது மக்கள் எச்சரிக்கை.
வாட்சப்பில் q ஆர் கோடுடன் பணம் கேட்டு ஹேக் செய்யும் புதுவித மோசடி பொது மக்கள் எச்சரிக்கை.
திருச்சியில் சமூக ஆர்வலரான ஸ்ரீரங்கம் மோகன்ராம் என்பவருடைய வாட்சப் நம்பர் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதாவது அவருடைய whatsapp நம்பரில் இருந்து எனக்கு q or கோடுடன் ரூபாய் ஐந்தாயிரம் அனுப்புங்கள் மாலை தந்து விடுகிறேன் என்று ஆங்கிலத்தில் மெசேஜ் அனுப்பி அவருடைய லிங்கில் உள்ள அனைவருடைய வாட்சப்புக்கும் சென்றுள்ளது.
இது சம்பந்தமாக மோகன்ராமிடம் கேட்டபோது தான், தான் கேட்கவில்லை என்றும் தன்னுடைய whatsapp நம்பர் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார். அதனால் யாரும் வாட்ஸ் அப்பில் பணம் அனுப்புங்கள் என்று கேட்டால் இனிமேல் யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்பதுடன் போன் அடித்து விபரம் கேட்டு அனுப்புங்கள். இப்போது புது மோசடியாக இப்படி ஒரு கும்பல் கிளம்பியுள்ளது ஆகவே அனைவரும் கவனமாக இருங்கள்.